ஜெர்மானிய அறிஞர் வின்ஸ்டேயன் என்ற அறிஞர் இருந்தார் . உலகில் உள்ள எல்லா நூல்களையும் கற்கிற ஆசை அவருக்கு வந்தது . வெறித்தனமாக புத்தகங்களை சேகரிக்க தொடங்கினார்
உலக நாடுகளின் தத்துவங்கள் ,தொழில் நுட்பங்ககள் விஞ்ஞானம் என்றுஅனைத்தையும் சேகரித்தார் . அவற்றில் ஒன்றைக்கூட அவர் படிக்கவில்லை . வயது எண்பதைக் கடந்தது .
அவருக்கு மரணபயம் வந்தது . உடனே அந்த நூல்களை மொழி பெயர்க்கஏற்பாடு செய்தார்,அதற்கும் காலம் போதாது என்பதால் அவற்றை படித்து யாரவது சொல்வார்களா என்று தேடினார் . அதற்குள் மரணம் வந்துவிட்டது.
புதிய நூல்களை உருவாக்க நினைத்து அதற்க்காக எல்லா நூல்களையும் சேகரித்த அவருக்கு எழுதமுடியாமல் போனதற்கு காரணம் திட்டமிடுதல் முறையாக இல்லாததுதான்.
அவர் மட்டும் சரியாக திட்டமிட்டிருந்தால் இன்னும் நிறைய நூல்கள் கிடைத்து இருக்கும்
எதையும் சேகரிப்பது என்பது முக்கியம் தான் . செயல்படுத்துவது அதைவிட முக்கியம் ,.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment