சிங்கப்பூரில் அசினை பின்தொடர்ந்த மர்ம வாலிபர்

இந்தி “கஜினி” படம் மூலம் அசின் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். வெளி நாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் அடையாளம் கண்டு ரசிகர்கள் மொய்க்கிறார்கள்.
ஷாப்பிங் போனாலும் கடை வீதிகளில் கூட்டம் திரள்கிறது. சில ரசிகர்கள் நடத்தைகள் எல்லை மீறியும் போகிறதாம்.
சமீபத்தில் சிங்கப்பூருக்கு அசின் சென்றபோது மர்ம வாலிபர் ஒருவர் அவரை விடாமல் பின் தொடர்ந்து இம்சித்த சம்பவமும் நடந்துள்ளது.
அசின் தங்கி இருந்த நட்சத்தர ஓட்டலுக்கு திடீரென்று அந்த வாலிபர் வந்தார். சுற்றி நின்ற பாதுகாவலர்களை பொருட்படுத்தாமல் அசின் அருகில் சென்று பேசினார். அவர் அனுமதி இல்லாமலேயே உடன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டார். அதோடு அவர் தொல்லை ஓயவில்லை.
அசின் எங்கு சென்றாலும் காரிலேயே பின் தொடர்ந்தார். திடீரென்று அசின் பாதுகாவலர் போல் செயல்பட தொடங்கினார். அவரை எவரும் நெருங்கி விடாதபடி பார்த்துக் கொண்டார். நெருங்கி வருபவர்களை தள்ளிவிட்டார்.
அசின் எங்கு சென்றாலும் காரிலேயே பின் தொடர்ந்தார். திடீரென்று அசின் பாதுகாவலர் போல் செயல்பட தொடங்கினார். அவரை எவரும் நெருங்கி விடாதபடி பார்த்துக் கொண்டார். நெருங்கி வருபவர்களை தள்ளிவிட்டார்.
அசின் கலந்து கொண்ட விழா அரங்கிலும் அந்த வாலிபரின் தொந்தரவுகள் எல்லை மீறியது. அங்கு நின்ற முக்கியஸ்தர்களிடம் தன்னை அசினுக்கு நெருக்கமானவர் போல் காட்டிக் கொண்டார். அசின் சாப்பிட்டுக் கொண்டிருந்த அறையிலும் அத்து மீறி நுழைந்தார். அவரது நடவடிக்கைகள் அசினுக்கு அச்சமூட்டியது. அவரைப் பற்றி புகார் செய்யவும் தயக்கமாக இருந்தது.
நட்சத்திர ஓட்டல் அறைக்கு திருப்பியபோது முன்கூட்டியே அங்கு வந்த வரவேற்பு அறையில் காத்து இருந்தார். மறுநாள் காலை மும்பைக்கு திரும்பியபோது விமான நிலையத்திலும் அந்த மர்ம வாலிபர் காத்திருக்க கூடும் என்று அசின் பயந்தார். ஆனால் அவரை காணவில்லை. நிம்மதி பெருமூச்சோடு மும்பை வந்து சேர்ந்தார்.
சிங்கப்பூர் சம்பவத்தில் அதிர்ச்சியான அசின் தனது பாதுகாவலர்களிடம் அறிமுகமில்லாத எவரையும் தன்னை நெருங்க விடக்கூடாது என்று கண்டிப்போடு கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment