"கஜினி, ஓம் சாந்தி ஓம்' திரைப்படங்களுக்கு பின், வெளியான எந்த படமும் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. சமீபத்தில் வெளியான "யுவ்ராஜ், சாந்தினி சவுக் டூ சீனா, தஸ்வீர்' போன்ற படங்கள் தோல்வி அடைந்தன. இது தவிர, மும்பையில் மல்டிபிளெக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் - திரைப்படத் தயாரிப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலால், நீண்ட நாட்களாக மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள் மூடப்பட்டு இருந் தன. இந்த பிரச்னையால், பாலிவுட்டுக்கு 100 கோடியில் இருந்து 200 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அக்ஷய் குமார், சஞ்சய் தத் நடித்த, "புளூ' என்ற திரைப்படம் பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப் பட்டும், அதை நல்ல விலை கொடுத்து வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. "கம்பாக்த் இஸ்க்' என்ற படம் 65 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படுகிறது. படத்தின் வெளிநாட்டு விற்பனை தொகையை அதிகரிப்பதற்காக, ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சில்வஸ்டர் ஸ்டாலோனை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.



தற்போது நிலைமை சரியில்லாத காரணத்தால், அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது. மேலும், அமிதாப் பச்சனை வைத்து தயாரிக்கத் திட்டமிட்டிருந்த "தலிஸ்மான்' என்ற திரைப்படத்தை, பிக் பிக்சர்ஸ் நிறுவனம் கைவிட்டுள்ளது. ஷாரூக் கானை வைத்து பிரமாண்டமாக எடுக்க முடிவு செய்திருந்த புதிய திரைப்படத்தின் தயாரிப்பை, ஈரோ நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. தொடரும் நிதி நெருக்கடி காரணமாக, பாலிவுட்டின் பிரபலங்கள் தங்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து பிரபல நடிகர்களை நடிக்க வைத்தால், போட்ட பணமாவது திரும்ப வருமா என்ற பீதி, தயாரிப்பாளர்களிடையே நிலவுகிறது. இதையடுத்து, சில பிரபலங்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துள்ளனர். பிரபல நடிகர் அக்ஷய் குமார் கடந்தாண்டு நிலவரப்படி 75 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். தற்போது, அதை பாதியாகக் குறைத்து 33 கோடி ரூபாய் சம்பளம் வாங்க முன்வந்துள்ளார். இதுகுறித்து அக்ஷய் குமார் கூறியதாவது: தற்போதுள்ள மார்க்கெட் நிலவரத்தின்படி, என் சம்பளத்தைக் குறைத்துள்ளேன் என்றார்.

0 comments:

Post a Comment