ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது வெள்ளைக்காரர்கள் நிறவெறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இங்கிலாந்திலும் இந்தியர்களுக்கு எதிராக நிறவெறி கொடுமைகள் தொடங்கி உள்ளன.
இங்கிலாந்தின் ஒரு பகுதியாக உள்ளது வடக்கு அயர்லாந்து. இங்குள்ள முக்கிய நகரம் பெல்பாஸ்ட். இங்கு ஏராளமான கம்ப்யூட்டர் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் அதிக எண்ணிக்கையில் இந்தியர் கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு எதிராக சில வெள்ளைக் காரர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பெல்பாஸ்ட் நகரில் உள்ள இந்திய சமுதாய மையம் ஒன்றுக்கு ஒரு மர்மகடிதம் வந்துள்ளது. உவ்ஸ்டர் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் அந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதா வது:-
வடக்கு அயர்லாந்தில் இருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும். இல்லை என்றால் உங்கள் மையங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம்.
வடக்கு அயர்லாந்து ராணி எலிசபெத்தின் தேசம். இதற்குள் மற்றவர்களுக்கு இடம் கிடையாது. வெளி நாட்டினர் மீது நாங்கள் அனுதாபம் காட்ட மாட் டோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 comments:

யூர்கன் க்ருகியர் said...

நமக்காவது சுதந்திரம் கிடைத்து ரொம்ப காலம் ஆயிட்டது.
வடக்கு அயர்லாந்து காரனுங்க இன்னுமே பிரிடிஷ் காரங்களிடம் அடிமையா இருக்காங்க ...ந்ங்கோயால.. இதுல என்னா எகத்தாளம் ??

Post a Comment