இங்கிலாந்து பெண்கள் தங்களை அழகு படுத்திக் கொள்வதில் மிகவும் அக்கரை எடுத்துக் கொள்வார்கள். இதற்காக வித விதமான மேக்-அப் சாதனங்களை வாங்கி குவிப்பது உண்டு. அவர்கள் “மேக்-அப்”புக்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள்? என்று ஒரு கணிப்பு நடத்தப்பட்டது. 1000 பெண்களில் இந்த கணிப்பை நடத்தினார்கள்.
அதில் இங்கிலாந்து பெண் கள் மாதந்தோறும் ரூ.5,500 கோடி அளவுக்கு மேக்-அப் சாதனங்களுக்காக செலவு செய்வது தெரியவந்தது. சராசரியாக ஒவ்வொரு பெண்ணும் தனது மேக்-அப்பையில் ரூ.4,700 மதிப்புள்ள மேக்-அப் பொருட்களை வைத்து இருந்தனர்.
16 வயதில் இருந்து 24 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ரூ.5,500 மதிப்புள்ள மேக்-அப் பொருள்களையும் 25 வய தில் இருந்து 35 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ரூ.5,700 மதிப்புள்ள மேக்-அப் பொருட்களையும் பையில் வைத்து இருந்தனர்.
மேக்-அப் பொருள் பெண்களுக்கு அத்தியாவசிய மானது என்று 62 சதவீதம் பேர் தெரிவித்தனர். 38 சதவீதம் பேர் “லிப்ஸ்டிக்” கண்டிப்பாக தேவை என்றனர்.
37 சதவீதம் பேர் மேக்-அப் இல்லாமல் எங்களால் இருக்கவே முடியாது என்றனர். நம்ம ஊர் சர்வே இருந்தா யாராச்சு சொல்லுகப்பா , நம்ம ஊர் பெண்கள் இவள் செலவு பண்ணமாட்டாங்க ,அவங்கதா எப்பவுமே அழகு.
0 comments:
Post a Comment