லண்டன் : சர்வதேச கிரிக்கெட்டில் 300க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ள தென் ஆப்ரிக்காவின் அம்பயர் ருடி கோயர்ட்சன் இந்தியாவின் சச்சின், வெஸ்ட் இண்டீசின் லாராவின் ஆட்டங்கள் சிறப்பானவை என பாராட்டு தெரிவிக்கிறார்.



தென் ஆப்ரிக்கா அம்பயர் ருடி கோயர்ட்சன் (60 வயது). இவர் தற்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் டெஸ்டில் அம்பயராக செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் அம்பயராக இருந்து இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் கோயர்ட்சன் (201 போட்டி). தற்போது வெஸ்ட் இண்டீசின் ஸ்டீவ் பக்னரை (128 போட்டி) அடுத்து, 100வது டெஸ்ட் போட்டியில் பணியாற்றும் இரண்டாவது அம்பயர் என்ற சாதனை படைத்துள்ளார்.



இதுகுறித்து கோயர்ட்சன் கூறியது: சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த அம்பயர்கள் பலர் உள்ளபோது, 100 டெஸ்ட், 200க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் பணியாற்றிய இரண்டாவது நபர் என்ற சாதனையை பெருமையாக கருதுகிறேன். இந்தியாவின் சச்சின், வெஸ்ட் இண்டீசின் லாரா போன்ற சிறந்த வீரர்களுடன் எனக்கு நெருங்கிப் பழகுவதற்கு கிடைத்த வாய்ப்புகளை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நிறைய வீரர்கள் இருக்கும் போது ஒருசில வீரர்களை மட்டும் குறிப்பிட்டு கூறுவது தவறுதான். இருப்பினும் சச்சினையும், லாராவையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். மிகுந்த மரியாதைக்குரிய வீரர்களான இவர்கள் பேட்டிங் செய்யும் போது ரசித்துப் பார்ப்பேன்.



வியக்கத்தக்க திறமை: இவர்கள் இருவரும் பவுலர்கள் கையில் இருந்து பந்து விடுபடும் போதே, அது எப்படி வரும் என்பதை கணிப்பதில் வியக்கத்தக்க திறமை கொண்டவர்கள். சரியாக வரும் பந்துகளை அதற்கேற்ப சரியான நேரத்தில், கால்களை முன்னும் பின்பும் நகர்த்தி, அழகாகவும், நேர்த்தியுடனும், கிடைக்கும் இடைவெளியில் பந்துகளை அடித்து ரன்கள் சேர்ப் பார்கள். இதில் சச்சின் இன்னும் கிரிக்கெட்டில் தொடர்ந்து இருந்து எங்களை மகிழ்ச்சியடையச் செய்து கொண்டுள்ளார். ஆனால் சோகமான நிகழ்வாக லாரா, கடந்த 2007ல் ஓய்வு பெற்றுவிட்டார்.



நமக்கு அதிர்ஷ்டம்: இப்போதும் சரி, எப்போதும் சரி. சச்சின், லாராவுக்கு மாற்றாக எந்த பேட்ஸ்மேன்களும் இருப்பதாக கருதவில்லை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த வீரர்கள் பிறந்து வாழ்ந்து வரும் நேரத்தில், அவர்களுடன் நாமும் இருப்பது நமக்கு அதிர்ஷ்டம் தான்.



வார்னுக்கு பாராட்டு: ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட், இரக்கமற்ற முறையில் அடித்து ஆடுவதில் வல்லவர். அதுபோல ஷேன் வார்ன் பந்து வீசும் போது அதிக நெருக்கடிகள் கொடுப்பார். எனது பக்கத்தில் இருந்து இவர் பந்துவீசும் போது, எனது முடிவு எடுக்கும் திறனை சோதனை செய்யும் விதத்தில் இருக்கும்.



மூன்றுவித கிரிக்கெட்: கிரிக்கெட் தற்போது தகுதியான மற்றும் பாதுகாப்பான நபர்களிடம் சென்றுள்ளது. ஒரு போட்டியில் மூன்றுவிதத்தில், ரசிக்கக்கூடிய வகையில் பிரிவுகள் இருப்பது கிரிக்கெட்டில் தான். நவீன தொழில்நுட் பங்களை நாம் வரவேற்க வேண்டும். ஏற்கனவே 90 சதவீதம் சரியான முடிவெடுக்கும் நிலையில் "அம்பயர் ரெபரல்' முறை வருவதன் மூலம், இன்னும் சரியான முடிவுகளை கொடுக்க தூண்டுதலாக இருக்கும்.


0 comments:

Post a Comment