இன்று மத்திய காட்சி சைதாபேட்டை ராஜ் தியேட்டரில் பார்க்கபோனேன் ஒன்னரை வருடங்களாய் வெடிகுண்டு முருகேசன் என்ற பெயர் ஈர்த்தது . ஆவலில் போனேன் தியேட்டரில் கூட்டமே இல்லை .சரி விமர்சனத்திற்கு வருவோம் .பசுபதி வண்டியில் தண்ணீர் கடைகளுக்கு ஊற்றும் வேலை செய்கிறார் . அவர் ஒரு வலிப்பு நோயாளி வெடிகுண்டு முருகேசன் என்ற பெயர் வேறு , அதற்கு தரும் விளக்கம் மிக கொடுமை .
கூடவே பள்ளியில் தன்னுடன் படித்த பெண் மனநோயாளியை கப்பற்றிவருகிறார். தண்ணி அடித்து , சாராயம் தனக்காக காய்ச்சி போலீஸ் கையில் மாட்டுகிறார் ஜட்ஜ் நிர்மலா பெரியசாமி இவரது நிலையை அறிந்து காப்பாற்றுகிறார் , போலீஸ் ஆக வரும் ஜோதிர் மயி இவரை முதலில் வெறுத்து பிறகு காதலிக்கிறார் , கோர்ட் இல் பசுபதி வசனம் பேசி சமூக அவலங்களை சொல்கிறார் , உதாரணமாக குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு படம் எடுக்க குழந்தைகள் அதில் நடிப்பது , டிவி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் ஆடி படுவது பற்றி மொக்கை போடுகிறார் , வடிவேலு சிரிக்கவைக்கிறார் அலெர்ட் ஆறுமுகமாக வந்து , ஜோதிர் மயி அழுதுகொண்டே இருக்கிறார் ,
சிறை கைதி இங்கு காலையில் காபி , மூன்று நேரம் சாப்பாடு சிக்கன் வேறு , நல்ல காற்று சாப்பிடவில்லை என்றால் ஏன் சாப்பிடவில்லை எண்டு அரசே கேட்கிறது வாடகை , வீட்டு வரி. கரண்ட் பில் கட்ட தேவை இல்லை என்ற விளக்கம் வேறு . ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்.
பிறகு வில்லன் அந்த மனநலம் குன்றிய பெண்ணை கெடுத்து விடுகிறான் , அதை கண்டுபிடித்த பசுபதி சண்டையில் வில்லன் தடுக்கி விழுந்து அவன் கை ஆயுதத்தாலேயே சாகிறான் . இதனால் பசுபதியை அவனின் அண்ணன் கொள்ள வருகிறான் , பிறகு அந்த பெண் ஒரு ஆண் குழந்தையை பெற்று தருகிறாள் இதனால் இருவரும் சமாதானமாகிறார்கள் .
படம் ஆரம்பித்தது முதலே பசுபதி மெசேஜ் சொல்ல ஆரம்பித்து விடுகிறார் , பால்கள் ஒன்றும் சரியில்லை , அதில் மாரியம்மன் பாடல் கூட இருக்கிறது ,
படம் வடிவேலு வரும் காட்சிகள் தான் நன்றாக உள்ளது , மற்றபடி எப்போது முடியும் என்று தோனுகிறது , பசுபதி எரிச்சல்தான் ஊட்டுகிறார் , ஜோதிர்மயி சுமார் . காமெடியாக போயிருந்தால் ரசித்திருக்கலாம் , மெசேஜ் சொல்லி வெறுப்பை தருகின்றனர் .
போதாதற்கு பெண் காவலர் சீருடையில் பணத்தை குத்தி ஆட விட்டு கேவலப்படுத்தியுள்ளனர்.
இந்த படத்திற்கு விமர்சனம் போட வேண்டாம் என்ற முடிவில் தான் இருந்தேன் , ஆனால் தெனாலி விமர்சனம் படித்தேன் , சிறந்த சமூக அக்கறையுடன் கூடிய சமூகா படம் என்று விமர்சனம் , சன் டிவி கூட இப்படி மொக்கை படங்களை சூப்பெர் என விமர்சித்து இல்லை , காமெடி படம் என்று சொல்லி இருக்கிறார்கள் காமெடி பத்து சதவீதம் தான் அதிலும் மொக்கை காமெடி தான் வடிவேலு தான் படத்தை அவ்வப்போது வந்து காப்பாற்றுகிறார் .
படத்தை பார்த்தவர்கள் யாராவது இருந்தால் நான் கூறியிருப்பது நன்றாக புரியும்
வடிவேலு ஸ்டைல் லில் சொன்னால் முடியல வலிக்கிறது .
மொக்கை படம் ....
படம் பார்த்தவர்கள் பிநூடம் மறக்காமல் போடுங்க அப்பதா உண்மையான விமர்சனம் எதுன்னு புரியும் . மேலே உள்ள பட ஸ்டில் பாருங்க சமூக அக்கறை என்ன நு புரியும் .
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment