தனது ரசிகர் பட் டாளங்களை நம்பி, அரசியலுக்கு வர முடிவெடுத்து விட்டார் நடிகர் விஜய். இதற்கு முக்கிய தூண்டுகோல், அவரது தந்தை. இதற்காக, நிபுணர்களை வரவழைத்து, அவர்களது ஆலோசனைகளை கேட்கப் போகின்றனராம்.தமிழகத்தைத் தாண்டி, இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களில், பெரும்பாலோர் ரஜினியின் ரசிகர்களாகவே இருப்பர். உலகளவிலுள்ள தமிழர்களின் இதயங்களிலும், அவர் இடம் பிடித்து விட்டார்.

இப்படி எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக, பெரும் செல்வாக்கில் இருக்கும் ரஜினியே அரசியல் கட்சி துவங்குவதற்கு தயக்கம் காட்டுகிறார்.காரணம், அரசியலுக்கு வந்து தனிக்கட்சி துவங்கி விட்டால், எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். தூபம் காட்டுபவர்களை விட, சேற்றை வாரி இறைப்பவர்கள் அதிகமாக இருப்பர். முகத்துக்கு நேர் புன்னகைப்பவர்கள், முதுகிலும் குத்துவர்.


நண்பர்களை விட, எதிரிகளைத்தான் அதிகமாக சந்திக்க வேண்டியிருக்கும். நண்பர்களே கூட எதிரியாகும் வாய்ப்பு உண்டு. சினிமாவையெல்லாம் ஏறக்கட்டி, முழுநேர ஈடுபாட்டுடன் உழைக்க வேண்டும். தியாகங்களைச் செய்ய தயாராக இருக்க வேண்டும்.இப்போதைய சூழ்நிலையில், ஏற்கனவே விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் களத்தில் உள்ளனர். இதைத்தவிர, அறுபது வருடமாக அரசியலில் கொட்டை போட்ட தி.மு.க., ஒருபுறமும், எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்டு, இப் போது ஆலமரம் போல் வளர்ந்து நிற் கும் அ.தி.மு.க., மறுபுறமும், அசைக்க முடியாத தூண்களாக உள் ளன.


இவர்கள் இருவர் மீதும், மாறி மாறி குதிரை ஏறி சவாரி செய்யும் பெரும் செல்வாக்குள்ள அகில இந்திய காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் ம.தி.மு.க., பா.ம.க., போன்றவைகள், தனித்தே போட்டியிட்டு ஓட்டுகளை பிரிக்கும் விஜயகாந்த் இன் னொரு புறம். இவைகளைத் தவிர, ஜாதிச் சங்கங்கள் நடத்தும் கட்சிகள் வேறு தனியாக உள்ளன. பார்கவ இனத்தவர்கள், கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள் ளனர்.ஆகவே, இந்த சூழ்நிலையில், விஜய்யும், அவரது ஆலோசகர்களும், சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


சினிமாவில் நல்ல பெயர் வாங்கி விடலாம்; அரசியலில் அது கடினம். ரசிகர்களை மட்டும் நம்பி கட்சி துவங்குவதில், எந்த பலனும் இல்லை.ரசிகர்களைக் காட்டிலும், மக்கள் செல்வாக்கு பலமடங்கு இருந்தது எம்.ஜி.ஆருக்கு. அது போன்ற செல்வாக்கு, எம்.ஜி.ஆர்., ஆரம்பித்து வைத்த அ.தி.மு.க., கட்சியின் தலைவிக்கே இல்லாதபோது, விஜய் எல் லாம் எம்மாத்திரம்? ஆர்வக் கோளாறினால் கட்சி ஆரம்பித்து அல்லல்படுவதை விட, சினிமாவில் சாதிப்பதே மேல்.

0 comments:

Post a Comment