எனக்குள் ஏற்பட்ட இத்தனை மாற்றங் களுக்கும் காரணம் ரசனை. மக்களின் ரசனை தான், என்னை இந்தளவிற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. ஆரம்பத்தில், இயக் குனர்கள் சொல்லும் கதைக்காக, என்னை தயார்படுத்திக் கொண் டேன். இயக்குனர் சொல்வதை, எப்படியாவது செய்து காட்டி விட வேண்டும் என உழைத்தேன். இதை மக்கள் ஏற்றுக் கொள் ளாமல் விட்டது, எனக்கு நடந்த நல்ல விஷயம்.


சிவகுமாரின் மகன் என்ற ஒரே காரணத் திற்காக, என்னை தூக்கி வைத்து கொண் டாடாமல், "உனக்கு இது போதாது' என, மக் கள் என்னிடம் கண்டிப் போடு இருந்தனர். மக்கள் என்னிடம் வேறு எதையோ எதிர் பார்க்கின்றனர் என்று தெரிந்தது. அந்த நேரத் தில் தான் எனக்கு, மிகச் சரியாக சில படங்கள் அமைந்தன. முதலில், பாலாவுடன் இணைந்து நடித்த, "நந்தா' படம், என் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

எனக்கென ஒரு அடையாளம் வேண் டும் என நினைத்தேன்; அதற்கேற்ற மாதிரி, என்னை நம்பி நல்ல கதைகளை கொடுக்க ஆரம்பித்தனர். என் படங்கள், வர்த் தக ரீதியாக பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும். அந்த வெற்றியை காப் பாற்றிக் கொள்ள விரும்புகிறேன். அதேநேரம், படத்தின் பொலிவு கெடாமல் பார்த்துக் கொள்கிறேன். என் படங்களில், பொழுதுபோக்கு அம் சங்களும் இருக்கும், புதுமையும் இருக்கும். இதுதான் எனக்கு பிடித்த சினிமா.

நான் மகாநடிகனே கிடையாது; நல்ல நடிகனாக இருக்க முயற் சிக்கிறேன். எப்பவுமே எனக்குள் பதட்டம் இருக்கும். இப்போது கூட, என் படங்களை ரிலீசுக்கு முன் பார்க்கிற தைரியம் எனக்கு கிடையாது. என் படங்களை பார்க்கும் போது, அதில் உள்ள குறைகள் மட்டுமே எனக்கு தெரியும். இப்போதெல்லாம், நினைத்த மாதிரி உடனே, ஷூட் டிங்கிற்கு என்னால் கிளம்ப முடியாது; என் மகள் தியாவுடன் கொஞ்சம் விளையாடினால் தான், ஷூட்டிங் போக அனுமதி கிடைக்கிறது.

0 comments:

Post a Comment