ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சி யாளர் ஜான் புக்கானன். இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அணிகளுள் ஒன்றான "கோல்கட்டா நைட் ரைடர்சுக்கும்' பயிற்சியாளராக பணியாற்றி வந்த இவர், தற்போது அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்திய கிரிக் கெட்டுக்கும், புக்கானனுக்கும் தற்போது எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் புக்கானன் இந்திய கிரிக்கெட்டை விடுவதாக இல்லை. "தி பியூச்சர் ஆப் கிரிக்கெட்-தி ரைஸ் ஆப் டுவென்டி-20' என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ள புக்கானன், அதில் இந்திய கிரிக்கெட் வீரர்களை கடுமை யாக விமர்சித்துள்ளார்.

அப்புத்தகத்தில் யுவராஜ், சச்சின், கவாஸ்கர், கங்குலி, ஹர்பஜன் பற்றி புக்கானன் தெரிவித்துள்ள கருத்துக்கள்: இந்திய வீரர் யுவராஜ் சிங் அடுத்த கங்குலியாக வேண்டும் என முயற்சிக்கிறார். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் கங்குலிக்கு இருந்த புகழும், நன்மதிப்பும் யுவராஜ் சிங்கிற்கு கிடைக்குமா என்பது சந்தேகமே.

சச்சினுக்கு தகுதியில்லை: சச்சின் டெண்டுல்கர் மிகச் சிறந்த வீரர் என்பதில் சந்தேக மில்லை. ஆனால் கிரிக்கெட்டின் புதிய பரிமாணமான "டுவென்டி -20'க்கு சச்சின் தகுதியானவர் இல்லை. இவ்வகைப் போட்டி களில் விளையாட திறமை மற்றும் "பார்ம்' இருந்தால் மட்டும் போதாது. அதிரடியாக ஆட வேண்டியது கட்டாயம். இது சச்சினுக்கு இல்லை என்பதே எனது கருத்து.

பந்து வீச்சாளர் ஹர்பஜன் மிக விரைவில் பிரச்னைகளை ஏற்படுத்தி விடுவார். அதில் சிக்கிக் கொண்டால், தான் செய்த தவறை மறைக்க போராடும் குணம் கொண்டவர்.

சிறந்த வீரர்:
முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி சிறந்த வீரர். போராட்டக் குணத்துக்கும், தன்னம்பிக் கைக்கும் கங்குலி மிகச் சிறந்த உதாரணம். இவரை ஆஸ்திரேலி யாவின் இயான் சாப்பலோடு ஒப்பிடலாம்.

சர்வாதிகாரி:
ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்சின் உரிமையாளர் விஜய் மல்லையா, ஒரு சர்வாதி காரியாக செயல்பட்டார். அவர் வீரர்களை விளையாட விடவும் இல்லை, பயிற்சி யாளரை பணி செய்யவும் விட வில்லை. பிறகு ஏன் அவர்களை பணி அமர்த்தி னார் என்று தெரியவில்லை. இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் புக்கானன்.

மோதல் இல்லை:
தென் ஆப்ரிக்காவில் நடந்த இரண்டாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டார் ஜான் புக்கானன். தொடர் துவங்குவதற்கு முன்பாக, கங்குலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி மெக்கலமை நியமித்தார். தவிர, சுழற்சி முறையில் கேப்டனை நியமிக்க உள்ளதாக அறிவித்தார்.

இவர் செய்த குளறுபடிகளால், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி படுதோல்வியை சந்தித் தது. இதனால் பயிற்சியாளர் பதவியிலிருந்து புக்கானன் தூக்கி எறியப் பட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய வீரர்கள் பலரது கடும் கண்டனத்துக்கு உள்ளானார். இவற்றுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக புத்தகம் எழுதி வஞ்சம் தீர்த்துள்ளார் புக்கானன் என, பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கு புக்கானன் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,""இந்திய வீரர்களான கவாஸ்கர், ஹர்பஜன், யுவராஜ் ஆகியோர் மீது எனக்கு தனிப்பட்ட மோதல் இல்லை. புத்தகத் தில் இடம் பெறாத கருத்துக்களை மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன. அதனை முழுமையாகப் படித்து புரிந்து கொள்ளவும். இந்திய கிரிக்கெட்டின் தற்போதைய நிலை, அதன் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை இப்புத்தகத்தில் தெரிவித்து உள்ளேன். இந்திய கிரிக்கெட்டுக்கு ஆதரவாகத் தான் இப்புத்தகத்தில் செய்திகள் இடம் பெற்றுள்ளன,'' என்றார்.

2 comments:

idea mani said...

jbk

Jeeva said...

who is buchannan, he never played a cricket, then how to he know... no one can comment sachin, he is a genious. all the world has accepted this, australians never accept the record holder other than australians,

Post a Comment