முஷரப்பை ஜனாதிபதி பதவியில் இருந்து விரட்டிவிட்டு அதிகாரங்களை பறித்துக்கொண்ட இவரை பற்றி கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் முழுவதும் எஸ்.எம்.எஸ். ஜோக் பரவி வருகிறது.
இந்தியாவில் சீக்கியர்களை கிண்டலடிக்கும் சர்தார்ஜி ஜோக்குகளையும் மிஞ்சும் வகையில் சர்தாரி ஜோக்குகள் உள்ளன. பாகிஸ்தான் நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்குலைவு, மின்வெட்டு, தீவிரவாதிகள் பிரச்சினை போன்றவற்றுடன் சர்தாரியை ஒப்பிட்டு எஸ்.எம்.எஸ். ஜோக்குகளில் கேலியும், கிண்டலும் செய்யப்படுகின்றன.
1990-களில் பெனாசிர் 2 தடவை பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் சர்தாரி, எல்லா அரசு வேலைகளுக்கும் 10 சதவீதம் கமிஷன் பெற்றதாக குற்றச்சாட்டு கூறப்படுவதுண்டு. இதை பிரதிபலிக்கும் வகையில் மிஸ்டர் டென் பெர்சன்ட் என்ற பெயரிலும் பாகிஸ்தானில் ஏராளமான எஸ்.எம்.எஸ். ஜோக்குகள் உலா வருகின்றன.
சமீபத்தில் ஒரு எஸ்.எம்.எஸ். ஜோக் பாகிஸ்தான் மக்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர், மாணவர்கள் பெயரை சொல்லி வருகைப்பதிவேட்டில் குறித்து கொண்டிருந்தார். எல்லா மாணவர்களும் “யெஸ் சார்” சொல்ல சர்தாரி பெயரை ஆசிரியர் சொன்னபோது எந்த பதிலும் இல்லை.
உடனே ஆசிரியர், சர்தாரி வரவில்லையா... எங்கே போய் இருக்கிறான்? என்று கேட்கிறார். அதற்கு ஒரு மாணவர் எழுந்து சார்... அவன் பாகிஸ்தானை கொள்ளையடிக்கப் போய் இருக்கிறான் என்கிறான்.
இந்த எஸ்.எம்.எஸ்.ஜோக் சர்தாரியையும், அவரது அமைச்சரவை சகாக்களையும் மிகுந்த கோபம் அடைய செய்துள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் உள்துறை அதிரடியாக புதுஉத்தரவு போட்டுள்ளது. சர்தாரியை கேலி, கிண்டல் செய்து யாராவது எஸ்.எம்.எஸ். ஜோக் அனுப்பினால், அவர்களுக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்தாரியை மிகவும் கொச்சைப்படுத்தி எஸ்.எம்.எஸ். ஜோக் உருவாக்கியவர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டு நாட்டுடைமை ஆக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச போலீஸ் துணையுடன் எஸ்.எம்.எஸ். ஜோக் உருவாக்கி பரப்புவர்களை கண்டுபிடிக்கப் போவதாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரஹ்மான்மாலிக் கூறி உள்ளார்.



மாலைமலர் நியூஸ்


நம்ம ஊர் ல விஜய் பெயரில் சர்தார்ஜி ஜோக் அனுப்புரவங்களுக்கும் இதுமாதிரி ஏதும் குடுங்கன்னா இப்படி என் நண்பன் சிவாவிடம் கேட்டேன் அதற்க்கு அவன் சொன்ன கமெண்ட்: அதா கட்சி ஆரம்பிச்சி சி . எம் ஆனதும் இங்கயும் அப்புடி சட்டம் போட்டுடுவோம்முள்ள
அப்புடியே இந்த வலைப்பக்கம் பொய் பாருங்கன்னா (http://jaiindia2020.blogspot.com)

1 comments:

ரவி said...

நன்றி தகவலுக்கு...

Post a Comment