நீ உன்னை அறிந்தால் விமர்சனம்
இதைவிட கொடுமை வேற இல்லைகோ
சென்னையின் குப்பத்து ராஜாக்கள் முரளியும், ரிஷி ராஜூம். லோடு ரிக்ஷா தொழிலாளிகளான இருவரும் சிறுவயது முதலே உடன்பிறவா சகோதரர்களாக ஒரே குடிசையில் வளர்ந்து ஆளாகிறார்கள். இருவரில் முரளிக்கு முதலில் திருமணம் நடக்கிறது. அவர் புது மனைவி குஷியோடு (புதுமுக நடிகை) குடியும் குடித்தனமுமாக சந்தோஷ வாழ்க்கை நடத்த, ரிஷிராஜ் குடியும், கூத்தியுமாக சாக்கடை வாழ்க்கை வாழ்கிறார். இதனால் குஷிக்கு, ரிஷி மீது வெறுப்பு. இருந்தாலும் ஆசை கணவர் முரளிக்காக அட்ஜஸ்ட் செய்து கொண்டு வாழ்கிறார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஒருநாள் குஷியை ரிஷி பலாத்காரம் செய்துவிட, அதில் குஷி இறந்து போகிறார். இதன் பின் என்ன? என்பதும், துப்பு கிடைத்த பின் நட்பு என்ன ஆனது என்பதும் மீதிக்கதை!
குப்பத்து ஏரியாவுக்குள்ளேயே கதை பயணிப்பதும், கானா பாட்டு, லோடு ரிக்ஷா, இட்லிக்கடை, குடி, கூத்தியாள், தெருச்சண்டை என்று ஒரே விதமான காட்சிகள் சற்றே போர். குஷியின் மரணத்திற்கு பிறகாவது முரளி ஆக்ஷனில் இறங்குவார் என்று பார்த்தால், அதன் பின்னும் அழுது வடிவது மேலும் ஒரு கொடுமை!
முரளி, ரிஷிராஜ், லோடு ரிக்ஷா என மாறி மாறி பார்ப்பதை இன்னும் சற்றே தவிர்த்து முரளியின் தாய் பாசத்தையும், மனைவி ஆகும் மாமன் மகள் மீதான பாசத்தையும் அழுத்தமாக காட்டியிருந்தால் ஜெயித்திருக்கலாம். அம்மாம் பெரிய உருவத்தை தூக்கிக் கொண்டு ரிஷி, பாட்டிலும், கையுமாக பண்ணும் கலாட்டாக்கன் என்னதான் குப்பத்து பேக்ரவுண்டு என்றாலும் ரொம்பவே ஓவர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment