நயன்தாரா - பிரபுதேவா காதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால் இருவருமே அதுபற்றி வெளிப்படையாக பேச மறுக்கின்றனர். பிரபுதேவா சொந்த விஷயம் என்று நழுவினார். நயன்தாராவோ வதந்திகள் என்கிறார்.

திருப்பதியில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியான போது ரகசிய திருமணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. என் பெற்றோர் முன்னிலையில் தான் திருமணம் நடக்கும் என்றார். பிறகு துபாயில் இருவரும் ஷாப்பிங் போனதாகவும் செய்தி பரவியது.
இந்த காதலுக்கு நயன்தாரா பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. காதலை முறித்து சினிமாவுக்கு முழுக்கு போட்டு வீட்டுக்கு வா என்று வற்புறுத்துகிறார்களாம். பிரபுதேவா பெயரை நயன்தாரா கையில் பச்சை குத்திய விஷயமும் பெற்றோரை கவலைப்படுத்தியுள்ளது.


இதுபற்றி நயன்தாராவிடம் கேட்டபோது ஆவேசப்பட்டார். அவர் கூறியதாவது:-
தினமும் என்னைப் பற்றி ஏதாவது ஒரு கதையை கிளப்பி விடுகின்றனர். எல்லோரும் என்னை குறி வைத்து அடிக்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த வதந்திகளை ஒரு பொருட்டாக கருதவில்லை. கவலைப்படவும் இல்லை. ஆனால் என் பெற்றோரை தேவை இல்லாமல் இந்த விஷயத்தில் இழுத்துவிட்டிருப்பது தான் எனக்கு வேதனை அளிக்கிறது.


திரையுலகை பொருத்தவரை எல்லா முடிவுகளையும் சுயமாகத்தான் எடுக்கிறேன். சமீபகாலங்களில் என் தாயோ-தந்தையோ படப்பிடிப்புகளுக்கு என்னோடு வந்தது இல்லை. ஆரம்ப காலத்தில் தந்தை துணையாக வந்தார். பிறகு தனியாக எதையும் சமாளிக்கும் திறமை வந்ததும் அவரை நிறுத்திவிட்டேன். என்னால் தன்னிச்சையாக செயல்பட முடிகிறது. ஒதுங்கி இருக்கும் என் பெற்றோரை வதந்திகளில் சிக்க வைப்பது சரியல்ல.
இவ்வாறு நயன்தாரா கூறினார்.


காதல் ஆர்வத்தில் பிரபுதேவா பெயரை கையில் பச்சை குத்தி கொண்ட நயன்தாராவுக்கு இப்போது அதுவும் தலைவலி தரக்கூடிய விசயமாகி விட்டது. சூர்யாவுடன் நயன்தாரா நடித்து வரும் ஆதவன் பட பாடல் காட்சி ஐஸ்லேண்டில் படமாக்கப்பட்டது. கவிஞர் தாமரை எழுதிய “ஏனோ ஏனோ பனித்துளி...” என்ற பாடலுக்கு சூர்யாவும், நயன்தாராவும் நடனமாடும் காட்சிகள் படமாக்கப்பட்டது.
அப்போது ஒளிப்பதிவாளர், நயன்தாராவின் கைகளில் குத்தியிருந்த பச்சையையும் சேர்த்து எடுத்தாராம். இதை கவனித்த நயன்தாரா “அந்த பச்சை வெளியே தெரிய வேண்டாம்” என கேட்டுக்கொண்டாராம்.

ஒரு கையில் மட்டுமல்ல, 2 கைகளிலும் பிரபுதேவாவின் பெயரை நயன்தாரா பச்சை குத்தியிருக்கிறார். படப்பிடிப்பு தலத்தில் யாரும் இதை கவனித்து விடக்கூடாது என்பதற்காக காட்சி முடிந்ததும் தனிமையில் சென்று விடுகிறார்.

0 comments:

Post a Comment