துக்ளக் தலைநகரை டெல்லி இலிருந்து தேவகிரிக்கு மாற்ற காரணமான கொடூர கதை
முகமது பின் துக்ளக் தொவ்லாபாத் என்று பெயரிடப்பட்ட தேவகிரி டெல்லிக்கு தெற்க்கே எழுநூறு மைல் இன்றைய கருநாடகத்தில் கோதாவரி நதிக்கு தெற்கில் உள்ளது இங்கு லட்சக்கணக்கில் டெல்லி மக்கள் உயிரை பிடித்துக்கொண்டு வர நாற்பது நாட்கள் ஆனது .தன் தவறை விரைவில் உணர்ந்துகொண்ட துக்ளக் தன் தவறை உணர்ந்து டெல்லிக்கே தலைநகரை மாற்றினான் . டெல்லி திரும்பும் வழியில் ஏராளமான மக்கள் உயிரை விட்டனர் . டெல்லியும் ஆங்காங்கே பாழடைந்து போக அதையும் புதுப்பிக்க வேண்டியதாயிற்று.
தலைநகரை மாற்ற என்ன காரணம் என்பது ஒரு கொடூரமான தமாஸ்
அதை இப்போது பார்ப்போம் :
ஹைதரபாத் கவர்னராக இருந்து வந்த முகமது பின் துக்ளக்கின் அத்தை மகன் பகாவுதீன் இவரை எதித்து கிளர்ச்சி செய்தான் . இதை அடக்க முகமது பின் துக்ளக்கின் ஒரு படையை அனுப்பினான் பின் அவனை பிடித்து முகமது பின் துக்ளக்கின் முன் நிறுத்தினர்.
முகமது பின் துக்ளக்கின் கோபத்தை பற்றி சொல்லவேண்டுமா அவனை சாட்டையால் விறகாகும் வரை அடித்து பகாவுதீன் தோல் உரிக்கப்பட்டு உடலை துண்டாக்கி வானை எண்ணையில் போட்டு வறுத்து அவனது மனைவி , குழந்தைகள் பலவந்தமாக உண்ண வைத்தான் .
தோலை உரித்து வைக்கோல் வைத்து தைத்து கோட்டை உச்சியில் தொங்கவிடப்பட்டது .
கலவரம் செய்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று இப்படி செய்தான் .
எங்கோ வடக்கில் இருந்து இந்தியாவை ஆள முடியாது மத்திய இந்தியாவில் இருந்தால்
இத்தகைய கலவரங்களை தடுக்க முடயும் ,எனவே தன் தலை நகரை தேவகிரிக்கு மாற்ற முடிவுசெய்தான்.
அமைச்சர்களும் தங்களது தலையை காத்துக்கொள்ள எதுவும் மறுப்பு சொல்லவில்லை.
தலைநகரை மாற்றுவதன் மூலம் இந்தியாவை ஆண்டுவிட முடியாது ,
ராஜ தந்திரமும் நிர்வாக திறமையும் வேண்டும் என்பது ஏனோ முகமது பின் துக் லக் கிற்கு தெரியாமல் போனது.
அவன் இறுதியில் வாழ்க்கையை மீன் தான் முடித்தது .
0 comments:
Post a Comment