பெண் ஆணிடம் எதை எதிர்பார்க்கிறாள் ? குணம், பணம், படிப்பு என்ற லிஸ்ட்டில் முதலிடம் ""ஜென்டில்மேன் பிஹேவியருக்குத்''தான் . இளம் பெண்களிடம் தான் நன்மதிப்பைப் பெற வேண்டுமென்பதில்லை. வீட்டில், ஆஃபீஸில்,பஸ்ஸில், உறவினரிடத்தில்...என எங்கும் எப்போதும் எல்லோரிடமுமே ""ஐ கேர் ஃபார் யு'' என்ற உண்மையான நோக்கத்துடன் ஜென்டில்மேனாக நடந்துகொள்ளுங்களேன்.

ஒரு பெண்ணுடன் வெளியில் போகும்போது இந்த விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவும்.

* எப்போதுமே பெண்ணை பத்திரமாக நடத்துங்கள். இருவராக ரோட்டில் நடக்க வேண்டுமானால் மெயின் ரோட்டில் நீங்கள் வெளிப்பக்கமாகவும், பெண் உள்பக்கமாகவும் நடக்க வேண்டும். நீங்கள் கவசமாக இருப்பதால் அவளுடைய மனதில் ""இவன் நல்லவன்'' என யோசிக்க ஆரம்பிப்பாள்.


* ஹோட்டல், ரெஸ்ட்டாரெண்ட் என வெளியில் போனால் முதலில் பெண் உட்கார்ந்த பிறகே நீங்கள் உட்கார வேண்டும். ""நான் உனக்காக செய்யறேன்..'' என்ற முகபாவத்துடன் செய்து பிரயோசனமில்லை.

* ""அவளுடன்'' அப்பாயின்ட்மெண்ட் என்றால் கையில் குடையுடன் கிளம்புங்கள். திடீரென மழை பெய்தால் குடை விரித்து அவளை நனையாமல் காப்பாற்றினால் அப்படியே குளிர்ந்து நன்றி மழையில் உங்களை நனைய வைத்து விடுவாள். விடலாமா கோல்டன் சான்ஸை ?

* எந்தப் பெண்ணுடனும் வெளியில் போனாலும் திரும்பவும் வீடு வரை பத்திரமாக் கொண்டு போய் விடுவது உங்கள் கடமை.

* பொதுவாக பஸ்ஸில், ரயிலில் வயதானவர்கள், கர்ப்பிணிகள், ஊனமுற்றோரைப் பார்த்தால் எழுந்து இருக்கை தருவது வழக்கம். அதுபோல நீங்களும் பெண்களைப் பார்த்தாலே எழுந்து ஸீட் ஆஃபர் பண்ண வேண்டும். அவள் நிற்க நீங்கள் தோரணையாக உட்கார்ந்திருந்தால் சரி வராது. கால் வலித்தாலும் பரவாயில்லை.ஜென்டில்மேன் என்ற பெயர் எடுக்கணுமா வேண்டாமா ?

* இன்னிக்கு கண்டிப்பா ""காஃபி டே''யில் மீட் பண்றோம் என்று புரோகிராம் போட்டுவிட்டு, அவள் வந்த பிறகும் நீங்கள் பாட்டுக்கு செல்லில் பிஸியாக இருப்பது டீஸண்ட்டான செயல் அல்ல. உங்கள் முன்னே ஒரு பெண் இருந்தால் அப்போதைக்கு அவள் மட்டுமே முக்கியமானவள். வேறெல்லாம் பிறகுதான் !

* நீங்கள் ஒரு பெண்ணுடன் எங்காவது வெளியில் போகிறீர்கள். திடீரென உங்களுடைய ஃப்ரெண்ட், பாஸ், உறவினர் என யாரையேனும் பார்க்க நேரிட்டால் நீங்கள் மாத்திரம் அவளிருப்பதையே மறந்து அரட்டையடிக்கக் கிளம்பாதீர்கள். அவளை யாரென அறிமுகம் செய்து வையுங்கள். முடிந்தால் அவளையும் உங்கள் அரட்டைக் கச்சேரியில் சேர்க்கவும்.

* பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் ஆண்கள் தங்களுக்காகக் கதவைத் திறப்பதுதான். தொண்ணூறு சதவிகிதப் பெண்கள் ஆண்களிடம் கவர்ந்த நம்பர் ஒன் செயலாக இதைத்தான். நம்பர்ஒன் ஜென்டில்மேன் பிஹேவியரும் இதுதான். மிகவும் சிம்பிளான விஷயம். ஆனால், ஆயிரம் அர்த்தங்கள். நீங்கள் இருவருமாகச் சேர்ந்து வரும்போது ஓடிப்போய் நீங்கள் முன்னால் கதவைத் திறப்பது அழகான செயல். ""நீ எனக்கு மிக முக்கியம்''என சொல்லாமல் சொல்லும் ஆக்ஷன்.

""ஹய்யோ...ரொம்ப டஃப், எங்களால முடியாது'' என்றெல்லாம் கத்தக் கூடாது. இன்றிலிருந்து, இப்போதிருந்தே ஆரம்பிக்கவும்.




0 comments:

Post a Comment